உடன்குடி அருகே கார் மோதி வியாபாரி பரிதாப சாவு

உடன்குடி அருகே கார் மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்

Update: 2022-06-03 16:23 GMT

மெஞ்ஞானபுரம்:

உடன்குடி அருகே கார் மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

வியாபாரி

சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு பன்னம்பாறையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 54). வியாபாரி. திருச்செந்தூரில் வசித்து வந்த இவர் தோசை மாவு தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் உடன்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். உடன்குடி அருகே ஜே.ஜே. நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

விசாரணை

விபத்தை ஏற்படுத்திய காருடன், அதில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மீது மோதிய கார் எது? அந்த காருடன் தப்பியவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்