லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி தமிழ் தங்கம் (வயது 62), இவர் உறவினர் முத்துசெல்வி (49) என்பவருடன் ஸ்பிக்நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை மதுரை காளவாசலை சேர்ந்த ஜாபர் அலி மகன் சுல்தான் (39) என்பவர் ஓட்டி வந்தார்.
இவர்கள் தூத்துக்குடி துறைமுக ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த தமிழ்தங்கம், முத்துசெல்வி, டிரைவர் சுல்தான் ஆகிய 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு
அப்போ அந்த வழியாக வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடனடியாக விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டார்.
காயம் அடைந்த 3 பேரையும் ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.