லாரி மீது கார் மோதல்; புதுப்பெண் படுகாயம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் புதுப்பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-12 18:37 GMT

திண்டிவனம், 

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் கேசவ் (வயது 23). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா (19) என்பவருக்கும் நேற்று அம்பத்தூரில் திருமணம் நடந்தது. இதையடுத்து மாலையில் புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு புறப்பட்டனர். காரை விழுப்புரம்பொன்வண்ண மலை நகரை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஓட்டினார். திண்டிவனம் நத்தமேடு பைபாஸ் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் புதுப்பெண் வெண்ணிலா மற்றும் உறவினர் நாராயணன், மீனா ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மணமகன் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்