மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வியாபாரி பலி

கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வியாபாரி பலியானார்.

Update: 2022-08-27 18:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெத்தன்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). ஆட்டு வியாபாரியான இவர் ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஓடாவிமடம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் கௌது (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்