மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தபால் அலுவலர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தபால் அலுவலர் பலியானாா்.

Update: 2023-06-15 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அடுத்த ம.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52). இவர் உளுந்தூர்பேட்டை தபால் நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆசனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சக்கரவர்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடைக்கல் போலீசார் சக்கரவர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்