மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ஒருவா் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-02 18:33 GMT

திருவண்ணாமலை தமிழ்மின்நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர், மோட்டார் சைக்கிளில் மற்றொருவருடன் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் பாலானந்தல் கூட்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்