மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி பலி

மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-28 18:30 GMT

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 2-வது வார்டுக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரொட்டி சேகர் என்ற சேகர் (வயது 58), விவசாயி. இவர் நேற்று மாலை ஈச்சம்பட்டியில் உள்ள தனது மகள் பாரதி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

துறையூர்-பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் ஈச்சம்பட்டி பங்களா நிறுத்தத்தை கடக்க முயன்ற போது புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

பலி

இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காரை ஓட்டி வந்த புதுச்சேரி நவசக்தி நகரை சேர்ந்த சந்தோஷ் (34) படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்