மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை-மகள் உள்பட 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை-மகள் உள்பட 3 பேர் படுகாயடைந்தனர்.

Update: 2022-11-05 18:51 GMT

அன்னவாசல் அருகே மதியநல்லூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 60). அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மகள் சிவபுரத்தை சேர்ந்த குமார் மனைவி நதியா (35). இவரது மகள் ரித்திக்கா (12). இவர்கள் 3 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் பணம்பட்டி தனியார் கல்லூரி அருகில் உள்ள ஓட்டலில் உணவுவாங்கிக்கொண்டு புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் பழனிவேல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் பழனிவேல், நதியா, ரித்திக்கா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் பழனிவேல், நதியா ஆகிய இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுமி ரித்திக்காவை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. நிர்வாகி பழனிவேல், அவரது மகள் நதியா ஆகிய இருவரையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்