டெம்போ மீது கார் மோதல்

சாமிதோப்பு அருகே டெம்போ மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்

Update: 2022-10-27 20:27 GMT

தென்தாமரைகுளம், 

மேலமணக்குடி கோவில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஆரோக்கியமும் (30) நேற்றிரவு காரில் ஈத்தங்காட்டில் இருந்து மணக்குடி நோக்கி சென்றனர்.

அப்போது சாமிதோப்பு பகுதியை சென்றடைந்த போது சாலையோரம் நின்ற ஒரு டெம்போ மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்