மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2022-06-23 08:32 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் உமா சங்கர் (வயது 21). இவர் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று தனது நண்பரான நசரத்பேட்டையை சேர்ந்த விஜய் (20) என்பவருடன் கல்லூரியில் மாற்றுச்சான்றிதலுக்கு விண்ணப்பித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்