கார் மோதி 2 வாலிபர்கள் பலி

திருச்சுழி அருேக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கார் மோதிய விபத்தில் பலியாகினர்.

Update: 2022-06-26 19:03 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருேக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கார் மோதிய விபத்தில் பலியாகினர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழபூலாங்காலை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் அழகுராஜ் (32). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வந்த போது திருச்சுழி அருகே உள்ள கே.செட்டிகுளம் விலக்கு பகுதியில் சிவகாசியை சேர்ந்த கன்சுல்ரகுமான் (57) என்பவர் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் முத்துராஜ், அழகுராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காரில் வந்த கன்சுல்ரகுமான், ஜீனத், தவ்ஹீத் பேபி, முகமது அஸ்லாம், அனீஸ் பாத்திமா உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரளச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்