கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்; என்ஜினீயர் பலி - மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம்

கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் பலியானார். அவரது மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-24 20:22 GMT

கொட்டாம்பட்டி,


கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் பலியானார். அவரது மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது கார் மோதல்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் சுடலைராஜன் (வயது 41). ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுடலைராஜன், தனது மனைவி அமிர்தபிரியா(35), மகன் சுடலைலோகேஷ்வரன் (12), மாமியார் குமாரி ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

காரை சுடலைராஜன் ஓட்டி வந்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மலம்பட்டி விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது.

ஒருவர் பலி

இதில் கார் நொறுங்கியதில் சுடலை ராஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த அமிர்தபிரியா, சுடலை லோகேஷ்வரன், குமாரி ஆகிய 3 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காரின் உள்ளே சிக்கி இருந்த சுடலைராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்