மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-14 18:46 GMT

வாலாஜா அருகே உள்ள அனந்தலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு -சென்னை சாலையில் ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்