மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.
நச்சலூர் அருகே உள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 48). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான வரதராஜன் என்பவரை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து கொண்டு பெரிய பனையூரில் இருந்து நச்சலூர் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிரே திருச்சி மாவட்டம் போதாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மாயகிருஷ்ணன், வரதராஜன் ஆகியோர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், கார் டிரைவர் ராஜலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.