கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதல்; ஜவுளிக்கடை உரிமையாளர் பலி

கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் பலியானார். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் ெமாபட்டில் சென்ற ஜவுளிக்கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலத் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ரூபன் ராஜ் (வயது 28). ஜவுளிக்கடை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு ரூபன் ராஜ் மொபட்டில் கோவில்பட்டி வந்து நண்பர்களை சந்தித்துள்ளார். பின்னர் கோவில்பட்டியில் இருந்து மொபட்டில் சாத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

சாவு

கோவில்பட்டி- சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் சந்திப்பில் அவர் சென்றபோது, மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட ரூபன் ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கார் டிரைவர் கைது

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன்

சுபாஷ் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்