ஆட்டோ மீது கார் மோதி டிரைவர் சாவு

ஆட்டோ மீது கார் மோதி டிரைவர் சாவு

Update: 2023-07-20 20:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானம் அருகே உள்ள பூங்கா ரோட்டில் இருந்து அரசு கல்லூரி ரோட்டுக்கு செல்வதற்கு ஆட்டோவில் வந்தார். அங்குள்ள நால்ரோட்டில் வந்தபோது, நியூஸ்கீம் ரோடு நோக்கி வந்த கார் திடீரென ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோ கவிழ்ந்து கதிர்வேல் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் காரை ஓட்டி வந்த உடுமலையை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்