கோவையில் கார் வெடிப்பு: ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பா...?

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-25 07:04 GMT

சென்னை

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியானவர் அவரது பெயர் ஜமேஷா முபின், என்ஜினீயர். அவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர்.

இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

2019 கொழும்பு தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான முகமது அசாருதீனை ஜமேஷா முபின் சந்தித்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். அவரை ஜமேஷா முபின் கேரள சிறையில் சந்தித்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்