பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; தம்பதி உள்பட 4 பேர் காயம்

அய்யலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-09-10 14:11 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கலைமகள் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 32). இவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி, சுகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடைக்கானல் செல்வதற்காக விருத்தாசலத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை சுகுமார் ஓட்டினார். இன்று காலை இவர்கள், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே நாய் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க சுகுமார் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த சுகுமார், அவரது மனைவி ராஜலட்சுமி (29), மகள் இஷானா (4), உறவினர் சுமதி (48) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய கார், கிரேன் மூலம் மீட்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்