ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாடானை, தொண்டி பகுதியில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

Update: 2023-07-08 18:45 GMT

தொண்டி,

திருவாடானை, தொண்டி பகுதியை சேர்ந்த 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சி 4 மையங்களில் நடைபெற்றது. இதில் குழந்தைகளின் உடல், மனநலம், ஆரோக்கியம், மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் வசந்தபாரதி, புல்லாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் சேதுராமன், சத்தியசீலன், ஆரோக்கியசாமி, ஜாஸ்மின் ஷீலா, பார்வதி, அன்ன சுந்தரி, சசிகலா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த 145 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்