கஞ்சா விற்ற, பயிரிட்ட 21 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

பர்கூர் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற, பயிரிட்ட 21 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்தார்.

Update: 2022-10-19 18:45 GMT

பர்கூர்:

பர்கூர் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற, பயிரிட்ட 21 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்தார்.

பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஞ்சா விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

பர்கூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கஞ்சா கடத்தியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


பர்கூர் பகுதிகளில் கஞ்சா விற்ற, பயிரிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். போலீசார், கஞ்சா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்