மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூா் கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-09 18:30 GMT

மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதையும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதையும் கண்டித்து பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நேற்று காலை நடந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை புனித பனிமய மாதா திருத்தலத்தில் வழிப்பாட்டு கூட்டம் முடிந்தவுடன் பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் கிறிஸ்தவர்கள் மவுனமாக ஊர்வலமாக புறப்பட்டு, சங்குபேட்டை வழியாக ரோவர் ஆர்ச் வந்தடைந்தனர். பின்னர் அங்கு அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களை தாக்கக்கூடாது. தேவாலயங்களை இடிக்கக்கூடாது. மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்