இன்று மின் நிறுத்த அறிவிப்பு ரத்து
சீர்காழி பகுதியில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்ததால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, தென்பாதி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர், பணமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகர், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக பணிகள் காரணமாக இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்துசெய்யப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளுக்கு இன்று மின் வினியோகம் இருக்கும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.