அடிபம்பு மீது கால்வாய் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து: மாநகராட்சி அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அடிபம்பு மீது கால்வாய் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து மாநகராட்சி அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

Update: 2022-08-10 21:41 GMT

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சமீபத்தில் இருவேறு இடங்களில் சாலை அமைக்கும் பணியின்போது, அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்பை அகற்றாமல் சாலைகள் அமைக்கப்பட்டது சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் 2-வது தெருவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அந்த தெருவில் ஓரமாக இருந்த அடிபம்பு ஒன்றை அகற்றாமல் அதை சுற்றி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிபம்பு பாதியளவு கால்வாய்க்குள் புதைந்து போனதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த அடிபம்பு நேற்று அகற்றப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியை கவனிக்காத மாநகராட்சி உதவி என்ஜினீயர் செல்வாராஜிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்