செங்கம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

செங்கம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 16:18 GMT

செங்கம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வழிதடங்கள் ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த தண்ணீரானது செங்கம் அருகே உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கும், செங்கம் பகுதியை தாண்டி பல்வேறு பகுதிகளுக்கும் நீர்வழி தடங்கள் மூலம் செல்கிறது.

இந்த நிலையில் செங்கம் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வழி தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். செங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்து நீர்வழி கால்வாய்களை மூடி விடுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. குறிப்பாக செங்கம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நீர்வழி கால்வாய்களை அடைத்து மனைகளாக மாற்றப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் காயம்பட்டு ஏரியில் இருந்து கரியமங்கலம் பெரிய ஏரிக்கு செல்லும் நீர்வழி கால்வாய்களை சீரமைத்து, ஏரிக்கு நீர்செல்ல தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்வழி கால்வாய்களை அகற்றி மீண்டும் கால்வாய்கள் ஏற்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்