இலவசங்களால் நாடு வளர்வதை நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? - சீமான்

இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா?

Update: 2022-08-18 09:33 GMT

திருச்சி,

திருச்சியில் இன்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது ;

இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டது தான். காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ் என்றார்

அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்சினை பேசுவோம். ஓபிஎஸ்வும், இபிஎஸ்வும் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா என கற்பனை செய்து பாருங்கள்.இவ்வாறு  தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்