ரிக் வண்டியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ரிக் வண்டியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
அன்னதானப்பட்டி:-
சேலம் அன்னதானப்பட்டி அகர மகால், கேட்டுக்காடு, கந்தப்பா காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதி வழியாக நேற்று ஒரு ரிக் வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள மின்கம்பத்தில் ரிக் வண்டி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரிக் வண்டியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அன்னதானப்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் ரிக் வண்டி டிரைவர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.