ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?

திருமருகல் அருகே குளங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-16 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே குளங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆகாயத்தாமரை செடிகள்

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரியக்குளம், திருவாசல் தோப்பு குளம், செட்டியார்குளம் என்ற பழங்கால குளங்கள் உள்ளன.

இந்த குளங்களை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடை காலத்தில் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த 3 குளங்களிலும் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் குளம் முழுவதும் படர்ந்து வளர்ந்து உள்ளது.

கூட்டு குடிநீரை நம்பி...

இதனால் அந்த குளங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தப்பட்டு படிகட்டுகள் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் எந்த பராமரிப்பும் இன்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் குளிக்க மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பல்வேறு பயன்பாட்டிற்கு நீர் இன்றி கூட்டு குடிநீரையை நம்பி உள்ளனர்.

வேதனை தெரிவிக்கின்றனர்

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குளங்களில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, குளங்கள் சீரமைக்கப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்