சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம்
ஆற்காடு சீத்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-ம் பருவம் முடிக்கும் தருவாயில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சால்காம் உற்பத்தி இந்தியா பிரைவேட் லிமிடெட், முருகப்பா குரூப் ஆப் கம்பெனி, டி.வி.எஸ். சுந்தரம் கிளேட்டன், டர்போ எனர்ஜி லிமிடெட், டி.வி.எஸ். பிரிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்பட பல்வேறு கம்பெனிகள் மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்று பேசினார். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன அணை வழங்கப்பட்டது .இதில் கல்லூரி தலைவர் குப்புசாமி ,செயலாளர் செல்வகுமார், பொருளாளர் டாக்டர். பாலகிருஷ்ணன், தாளாளர் தரணிபதி மற்றும் இயக்குனர்கள் சங்கர், ரமேஷ், ஆதிகேசவன், மானக்சந்த், கருணாகரன், மோகன் குமார், ஆசிநாதன் உள்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.