சி.ஐ.டி.யு.வினர் பிரசார கூட்டம்

உளுந்தூர்பேட்டையில் சி.ஐ.டி.யு.வினர் பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-05-30 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சி.ஐ.டி.யு. மாநில தலைவருமான சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கிய இந்த நடைபயணம் நேற்று முன்தினம் மாலை உளுந்தூர்பேட்டை வந்தடைந்தது. இதையடுத்து அவர்களுக்கு மாவட்டதலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் வீராசாமி, மாவட்ட துணை தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், சேகர் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பிரசார கூட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்