கள்ளக்குறிச்சியில் பிரசார கூட்டம்

கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு.சார்பில்பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-05-28 18:45 GMT

இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டம், மின்சார சட்டத்தை திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய நடை பயணம் மேற்கொண்டுள்ளது.. இந்த நடைபயண இயக்கம் நேற்று கள்ளக்குறிச்சி வந்தடைந்தது. அப்போது அவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தொழிற்சங்க அமைப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து அம்பேத்கர் சிலை அருகில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கண்ணன், மாநில துணைத்தலைவர் விஜயன், ஸ்டாலின் மணி, ஆனந்தன், பூவராகவன் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யு.சங்கத்தை சேர்ந்த மண்டல துணை தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள், முருகன், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்