சென்னையில் இன்று 'மக்களுடன் முதல்வர் முகாம்'

சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-05 05:00 GMT

சென்னை,

அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்றும், நாளையும் 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.

சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்