விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்
நெய்க்குன்னம் ஊராட்சியில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை ஒன்றியம், நெய்க்குன்னம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தமிழக அரசின், கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் சார்பில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் ஹத்தீஜா பானு மற்றும் பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டோக்கன் பெற்ற பயனாளிகள் கொடுத்த விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யும் பணி மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சியை சேர்ந்த 475 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி நடந்தது.