மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-25 10:43 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.

முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் முகாமில் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவும் செய்யப்பட்டது. தகுதியுடைய 212 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்