மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-03 17:36 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட 427 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 187 நபர்களுக்கும், காது கேளாதோர்க்கான 52 நபர்களுக்கும், கண் பாதிக்கப்பட்ட 54 பேருக்கும், மனவளர்ச்சி குன்றிய 69 நபர்களுக்கும் மருத்துவர்களால் பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான முதமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 127 நபர்களுக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 59 நபர்களும், வங்கி கடன் வேண்டி 37 நபர்களும், மொபட் வேண்டி 17 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் 3 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்