#லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

Update: 2022-06-22 03:43 GMT
Live Updates - Page 2
2022-06-22 08:03 GMT


2,505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,505 பேரிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளார். 

பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேரை தவிர அனைவரிடமும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-06-22 08:01 GMT


பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு

அதிமுக செயற்குழு - பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் வழங்கப்பட்ட தீர்மானங்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படாததால் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

2022-06-22 07:29 GMT

பொதுக்குழுவுக்கு வாருங்கள் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

2022-06-22 07:27 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


2022-06-22 07:16 GMT


மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக தகவல்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-06-22 07:13 GMT


நாளை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: உறுப்பினர்களுக்கு 3 கட்டுப்பாடுகள் விதிப்பு

நாளை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில், உறுப்பினர்களுக்கு 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி

* பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.

* பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆதார் அல்லது வாக்காளர் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-22 07:10 GMT


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் பங்கேற்பார் என நம்பிக்கை உள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். தவறுக்கு மேல் தவறிழைத்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக ஜனநாயகம் மலர்ந்த அமைப்பு இங்கு அராஜகத்திற்கு இடமில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் பங்கேற்பார் என நம்பிக்கை உள்ளது. ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

2022-06-22 06:44 GMT



2022-06-22 06:11 GMT



Tags:    

மேலும் செய்திகள்