ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம்

ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2023-06-07 18:45 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் 10-ந்தேதி கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் தாலுகா-லாந்தை ரேஷன்கடை, ராமேசுவரம் தாலுகா-நடராஜபுரம் ரேஷன்கடை, திருவாடானை தாலுகா- குஞ்சங்குளம் ரேஷன்கடை, பரமக்குடி தாலுகா-தாளையடிகோட்டை இ-சேவை மையம், முதுகுளத்தூர் தாலுகா-நல்லூர் ரேஷன்கடை, கடலாடி தாலுகா-எஸ்.தரைக்குடி ரேஷன்கடை, கமுதி தாலுகா-கள்ளிக்குளம் ரேஷன்கடை, கீழக்கரை தாலுகா-பனைக்குளம் ரேஷன்கடை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா- ராதானூர் ரேஷன்கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்துதல், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரேஷன்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார்கள் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்