சட்ட விழிப்புணர்வு முகாம்

இளையான்குடி அருகே உள்ள வண்டல் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-28 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள வண்டல் கிராமத்தில் உடல் உழைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இளையான்குடி அருகே உள்ள வண்டல் கிராமத்தில் உடல் உழைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவும் இணைந்து வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் நீதிபதியுமான ஹரி ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி வக்கீல் அகமது அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொழிலாளர் பாதுகாப்பு, உடல் நலன், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் உறுப்பினர்கள் அட்டை புதுப்பிப்பு, அரசின் உதவித்தொகை பெறும் வழிமுறைகள் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக அமைப்புசாரா தொழிலாளர் நல அமைப்பாளர் வாசுகி அனைவரையும் வரவேற்று பேசினார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நாகேந்திரன், இளையான்குடி வட்ட சட்டபணிகள் குழுவின் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்