பாலக்கோடு:
பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்குமார் தலைமை தாங்கி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் வக்கீல்கள் சங்க தலைவர் குப்பன், செயலாளர் இளவரசு, துரைராஜ், வக்கீல்கள் புனிதா, ஜோதி, சட்ட தன்னார்வலர் சின்னசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, உதவி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.