தர்மபுரி மாவட்டத்தில் 23 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்-வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது

Update: 2023-01-08 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 23 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் வருகிற 31-ம் தேதி வரை நடக்கிறது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழிப்புணர்வு முகாம்கள்

தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 23 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

அதன்படி கடத்தூர் மருந்தகம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) தானனூரிலும், பண்டஅள்ளி மருந்தகம் சார்பில் 11-ந் தேதி (புதன்கிழமை) பங்குநத்தம் கிராமத்திலும் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது. இதேபோல் அ.பள்ளிப்பட்டி மருந்தகம் சார்பில் பாப்பம்பாடி கிராமத்திலும், ராமியன அள்ளி மருந்தகம் சார்பில் சிவனள்ளி கிராமத்திலும் நடக்கிறது. 20-ந் தேதி தீர்த்தமலை மருந்தகம் சார்பில் கூடலூரில் நடக்கிறது.

வாணியாறு அணை

காளிப்பேட்டை மருந்தகம் சார்பில் செங்காட்டுப்புதூரிலும், 21-ந் தேதி கோட்டூர் மருந்தகம் சார்பில் பி.கொல்லஅள்ளியிலும், கோபிநாதம்பட்டி மருந்தகம் சார்பில் ராணிமூக்கனூரிலும் முகாம்கள் நடக்கிறது. மெணசி மருந்தகம் சார்பில் விழுதிப்பட்டியிலும், 23-ந் தேதி மாரண்ட அள்ளி மருந்தகம் சார்பில் கொலசனஅள்ளியிலும், பென்னாகரம் மருந்தகம் சார்பில் நாயக்கனூரிலும், 24-ந் தேதி மொரப்பூர் மருந்தகம் சார்பில் பாளையம் கிராமத்திலும், 25-ந் தேதி மோளையானூர் மருந்தகம் சார்பில் வாணியாறு அணையிலும் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கின்றன.

27-ந் தேதி பாளையம்புதூர் மருந்தகம் சார்பில் பாகலஅள்ளியிலும், பிக்கிலி மருந்தகம் சார்பில் மலையூர் வரக்கொல்லையிலும், தொட்டம்பட்டி மருந்தகம் சார்பில் சொர்ணம்பட்டியிலும், 28-ந் தேதி கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு மருந்தகம் சார்பில் குமாரபாளையத்திலும், 30-ந் தேதி ஏரியூர் மருந்தகம் சார்பில் காமராஜபேட்டையிலும், 31-ந் தேதி சாமனூர் மருந்தகம் சார்பில் குட்டலான அள்ளியிலும், பாப்பாரப்பட்டி மருந்தகம் சார்பில் மண்ணேரியிலும் கால்நடை முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் இந்த முகாம்களுக்கு தங்களின் கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்