காரைக்குடி,
காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பழனிவேலு தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜெயேந்திரன் வரவேற்றார். காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அருள்தாஸ், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன், நகர செயலாளர் பாட்ஷா, காரைக்குடி குருதி கொடையாளர்கள் அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ்மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 69 பேர் ரத்ததானம் செய்தனர்.