வாக்காளர்பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளர்பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூரில் உள்ள பாபா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருப்பத்தூர் பேரூர் செயலாளர் இப்ராம்ஷா, முருகேசன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் ராஜா முகமது மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதே போல் காரைக்குடி நகர் மகரிஷி பள்ளி, ராமநாதன் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்