காளையார்கோவில்,
காளையார்கோவில் ஒன்றியம் காட்டாத்தி கிராமத்தில் புலியடிதம்மம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை மற்றும் பொதுசிகிச்சை அளிக்கப்பட்டது. புலியடிதம்மம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் தினேஷ் குமார், காளையார் கோவில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிலம்பரசன், கால்நடை ஆய்வாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வேதவள்ளி, செயற்கை முறை கருவூட்டல் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகநாதன், காட்டேந்தல் சுக்காவூரணி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, துணை தலைவர் அழகுசுந்தரம் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், தீவனப்புல் வளர்ப்பு மேலாண்மை பற்றி கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி, தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது.