கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி நடந்தது.

Update: 2022-11-25 16:59 GMT

தொண்டி, 

உலக மரபு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் கட்டிடக்கலை பயிற்சியை திருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் நடத்தியது. பயிற்சிக்கு திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசைலம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் செயலர் ரஜினி பயிற்சியை ஒருங்கிணைத்தார். சிவன் சன்னதியின் தெற்கே தரையில் இருந்த கல்வெட்டை படி எடுத்து அதில் இருந்த தகவல்களை ராமநாதபுரம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு மாணவர்களுக்கு படித்துக் கூறினார். கோபுரம், விமானம், கருவறை, அதிஸ்டானம், பாதசுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி, கபோதம், போதிகை போன்ற கோவில் கட்டிடக்கலை அமைப்பு பற்றி ராமநாத புரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத்குமார் ஆகியோர் விளக்கினர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ரியாஸ் கான், முதுகலை ஆசிரியர் தீபன் சக்ரவர்த்தி ஆகியோர் செய்தனர். பள்ளி மாணவர்கள் 40 பேர் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்