சிறுவர், சிறுமிகளுக்கு செயல்விளக்கம்

ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-10-31 17:55 GMT


பொதுமக்களுக்கு நேரடியாக உதவும் காவல்துறை, தீயணைப்புத்துறை, அஞ்சல்துறை, ரெயில்வே துறை ஆகியவற்றின் துறைகளுக்கு நேரில் அழைத்து சென்று அவர்களின் பணி குறித்து நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல்பய்யினா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் மாணவ-மாணவிகள் தலைமை ஆசிரியை ஜெபாசவுபாக்யராணி தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிற்கு அழைத்து சென்று அவர்களின் பணிகளை விளக்கி காட்டப்பட்டது. ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு வந்த மாணவ-மாணவிகளை நிலைய அலுவலர்கள் ராஜேந்திரன், ஜமால் அப்துல்நாசர் ஆகியோர் வரவேற்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு தீயணைப்பு கருவிகள், கவச உடைகள், தீதடுப்பு முறைகள், வெள்ள பாதிப்பு மீட்பு முறைகள், சமையல் எரிவாயு தீ தடுப்பு முறைகள் போன்றவை குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். இதுதவிர தீயணைப்பு வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவிகள், உபகரணங்கள், உடைகள், கவச உபகரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் அதன் பெயர்கள், அதன் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினர். தீயணைப்பு நிலையத்திற்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் அதனை அறிந்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்