ரத்த தான முகாம்

ரத்த தான முகாம் நடந்தது.

Update: 2022-10-26 18:13 GMT

காளையார்கோவில், 

மருதுபாண்டியர்களின் 221- வது குருபூஜை விழாவை முன்னிட்டு மருதுபாண்டியர் நல அறக்கட்டளை, தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, செஞ்சிலுவை சங்கம், அரிமா சங்கம், சைக்கிள் கிளப் ஆகியோர் இணைந்து ரத்ததான முகாமினை நடத்தினர். இந்த முகாம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மருதுபாண்டியர் நல அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காளையார் கோவில் தாசில்தார் உமா மகேஸ்வரி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சிவகங்கை மாவட்ட தலைவர் கஸ்பார், சட்ட ஆலோசகர் நற்கீரன், ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்தூரி குருநாதன், பாண்டியராஜன், காளையார்கோவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவசண்முகம் உட்பட அரிமா சங்க செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்