மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராமத்தில் கால்நடைகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு தி.மு.க. மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகேயன், டாக்டர் முத்து ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன், கால்நடை பாதுகாப்பு உதவியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.