கிருஷ்ணகிரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்

Update: 2022-09-21 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விழிப்புணர்வு முகாம்

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் கிருஷ்ணகிரியில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தில் நடந்தது. முகாமில் மாவட்ட வள மைய அலுவலர் நிக்கோலா பிரகாஷ் வரவேற்றார்.

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாமை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாவட்ட தொழில் மையம் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார்.

பயிற்சி திட்டங்கள்

இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் மூலம் வழங்கப்படும் சலுகைகளை பற்றியும், பயிற்சி திட்டங்களை பற்றியும் விளக்கம் அளித்தார். சிறு மற்றும் நடுத்தர மேம்பாட்டு வளர்ச்சி நிறுவன இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கி சிறு மற்றும் குறுந்தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்து கூறினார்.

இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய அலுவலர் திவ்யா, சிறு தொழில் பயிற்சி திட்டங்கள் பற்றி கூறினார். முடிவில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர் ஆனந்த், கடன் திட்டங்கள் பற்றி பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார். முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் முத்துகுமார், சிவலிங்கம், பாஸ்கர், கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்