தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Update: 2022-08-09 16:22 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 26-ந் தேதி ஆகிய நாட்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் காலை 10 மணி முதல் நடத்தப்படுகிறது. முகாமில் மயிலாடுதுறை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் கலந்துகொண்டு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். இதற்காக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண் அல்லது 63834 89199 என்ற வாட்ஸ்ஆப் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்