மோகனூர் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாவினை பரிசோதனை முகாம்
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாவினை பரிசோதனை முகாம்
மோகனூர்:
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் நாவினை பரிசோதனை முகாம் நடந்தது. மோகனூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி, ஒருங்கிணைப்பாளர் ராதிகா ஆகியோர் தலைமையில் சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் பரிசோதனை செய்து நாக்கு பிடிப்பு உள்ள மாணவர்களை கண்டறிந்தனர்.
நாக்கு பிடிப்புடைய மாணவர்களால் நாவினை வெளியே நீட்டவும், நாவினை சுழற்றவும் இயலாது. இவர்கள் சரளமாக பேசவும், படிக்கவும் பெயர்களை உச்சரிக்கவும் சிரமப்படுவார்கள். மேலும் பேசும்போதும், படிக்கும்போதும், உச்சரிப்பு பிழை ஏற்படும். இதனை சரி செய்ய சிறிய அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து பேச்சுப்பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி, வாசிப்பு திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் முழுவதும் சரிசெய்யப்படும். அறுவை சிகிச்சை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் காது, மூக்கு தொண்டை மருத்துவ பிரிவில் இலவசமாக செய்வதற்கு பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்றுனர்கள் ஆலோசனை வழங்கப்பட்டது.