பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி, எஸ்.புதூர் ஆகிய கிராமங்களில் சமுதாய கூடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எஸ்.புதூர் வட்டார வயலகம,் தானம் வயலகம் அறக்கட்டளை சார்பில் பெண் சிசு கலைப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை இயக்குனர் யோகவதி முன்னிலை வகித்தார். இதில் பெண் சிசு கலைப்பு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்கள் சாதனை குறித்து விழிப்புணர்வு நடை பெற்றது. இதில் வட்டார வயலக தலைவர்கள், பணியா ளர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.